விபத்தில் ஒருவர் பலி

சிலாபம் – கொழும்பு பிரதான வீதியின் கொஸ்வாடிய பகுதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஒன்று அதே திசையில் பயணித்த சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், விபத்தில் படுகாயமடைந்த இருவரையும் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சைக்கிளில் பயணித்த 66 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

பிரேத பரிசோதனைகள் இன்று நடைபெறவுள்ளதுடன், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மாரவில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு