இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுவதுடன், காற்றின் வேகமானது சடுதியாக அதிகரித்து வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே மீனவர்கள் அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு கடற்பகுதிகளுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுவதுடன், மேலும் கடலில் பயணம் செய்வோரும் இவ்விடயத்தில் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்ட ஒரு அலைபோன்ற தளம்பல் நிலை ஒரு தாழமுக்கப் பரப்பாக தீவிரமடைந்துள்ளதுடன் மேலும் வலுவடையுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இது இலங்கையின் தென் பகுதியில் மையம் கொண்டிருப்பதுடன் மேற்கு – வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும், இதன் தாக்கம் காரணமாக நாட்டின் பல பாகங்களிலும் மேகக்கூட்டங்களுடன் வானமும் மழையுடன் கூடிய வானிலையும் தொடருமென்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.