சமூக வலைத்தளங்கள் தொடர்பில் தீர்வு

பேஸ்புக், வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்குள் பிரவேசிப்பதற்கு உள்ள தடை தொடர்பில், இன்றைக்குள் தீர்வொன்று பெற்றுக்கொடுக்கப்படுமென அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்தத் தடை தொடர்பில், தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இது தொடர்பான தீர்வொன்று இன்று பெற்றுத்தரப்படுமென தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

பேஸ்புக், வைபர், வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்குள் பிரவேசிப்பதற்கு, கடந்த 7ஆம் திகதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு