இந்தியத் தூதுவர் பதவியேற்பு

புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கைக்கான இந்திய துணைத்தூதுவர் சங்கர் பாலசந்திரன் இன்று தனது பதவிகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

கடந்த வெள்ளிக்கிழமை யாழிற்கு வருகை தந்த இவர் முதன் முதலாக யாழ்ப்பாணம் மருதடி வீதியில் அமைந்துள்ள இலங்கைக்கான இந்திய துணைத்தூதரகத்திற்கு வந்திருந்த நிலையில், இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கடந்த 04 வருடங்களுக்கு மேலாக இலங்கைக்கான இந்திய தூதுவராக இருந்த ஆறுமுகம் நடராஜன் தனது சேவைக் காலத்தினை நிறைவு செய்து டில்லிக்குப் பயணமாகிய நிலையிலேயே, புதிய தூதுவராக சங்கர் பாலசந்திரன் யாழிற்கு வருகை தந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு