மரக்கறி விலை குறையும்?

பெரும்போக செய்கையின் மூலம் பெறப்பட்ட மரக்கறி மற்றும் நெல் அறுவடைகள் சந்தைக்கு வருவதால் இவற்றின் விலை எதிர்வரும் மாதங்களில் குறைய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 07 மாதங்களுக்குப் தேவையான நெல் அறுவடை தற்போது கிடைக்கப்பெற்றுள்ளதாக விவசாய ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. இந்தமுறை பெரும் போகத்தில் 23 இலட்சம் மெற்றிக் தொன் அறுவடை எதிர்பார்க்கப்பட்டது.

இதனால், எதிர்வரும் தினங்களில் திறந்த சந்தையில் ஒரு கிலோ சம்பா அரிசியின் விலை 80 ரூபா வரை குறைவடையலாம் எனவும் எதிர்பார்க்கப்படுவதுடன், யாழ்ப்பாணம், தம்புத்தேகம, புத்தளம் ஆகிய பகுதிகளில் இருந்து மரக்கறி அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டு சந்தைகளுக்கு அனுப்பப்படுவதனால், மரக்கறியின் விலையிலும் வீழ்ச்சி எதிர்காலத்தில் ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், சிறிய வெங்காயம் ஆகியவற்றின் விலைகளும் 80 ரூபாவில் இருந்து 120 ரூபாவிற்கு இடைப்பட்ட மட்டத்தில் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு