மூவரைக் காணவில்லை

முல்லைத்தீவில் கடற்றொழிலுக்காக படகில் கடலுக்கு சென்ற மூன்று மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு, நாயாறு பிரதேசத்தில் இருந்து நேற்றைய தினம் இந்த மீனவர்கள் கடலுக்கு சென்றுள்ளதாகவும், கடற்படையின் உதவியுடன் காணாமல் போயுள்ள மீனவர்களை தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு காணாமல் போயுள்ளவர்கள் சிலாபம், பங்கதெனிய பிரதேசங்களை சேர்ந்த 50, 48 மற்றும் 24 வயதானவர்களென தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு