தமிழக காட்டுத்தீயில் பலியான கல்லூரி மாணவர்களின் எண்ணிக்கை 09 பேராக உயர்ந்துள்ளதாக தமிழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காட்டுத்தீ பரவிய குரன்கினி மலைத்தொடரில் இருந்து 21 பேர் பாரிய காயங்களுடன் மீட்கப்பட்டுள்ள அதேவேளை, மேலும் 06 பேர் தீப்பரவலுக்கு இடையே அகப்பட்டிருக்கலாமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
மீட்பு பணியாளர்களுக்கு உதவும் வகையில் இராணுவம் அழைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த பிராந்தியத்தில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளதனால் மீட்பு பணி மிகவும் மந்தகதியிலேயே இடம்பெறுவதாகவும் தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன.