அமெரிக்கா – வடகொரியா சந்திப்பு: தென்கொரியாவின் கருத்து

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்புக்கும் இடையிலான சந்திப்பு குறித்து இதுவரை வடகொரியாவிடம் இருந்து எந்தவொரு பதிலும் வரவில்லையென தென் கொரியா தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நேரடி பேச்சுவார்த்தைகளுக்கான வட கொரியாவின் அழைப்பை கடந்த வெள்ளிக்கிழமை ஏற்றுக்கொண்ட நிலையில், திட்டமிடப்பட்ட பேச்சுவார்த்தைகள் தொடர்பான விபரங்கள் மற்றும் சந்திப்பு இடம்பெறும் இடம், நிகழ்ச்சிநிரல் குறித்த எந்த விபரங்களும் இன்னும் முடிவு தீர்மானிக்கப்படவில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், வட கொரியா மற்றும் அமெரிக்க இடையிலான சந்திப்பு தொடர்பாக வட கொரிய அதிகாரிகளிடம் இருந்து உத்தியோகபூர்வ பதில் எதுவும் வரவில்லையென தென் கொரிய ஒத்துழைப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ள அதேவேளை, வடகொரியா இந்த விடயத்தை எச்சரிக்கையுடன் அணுகுவதுடன், நிலைப்பாட்டை உருவாக்குவதற்கு அவர்களுக்கு நேரம் தேவைப்படுவதாகவும் தென் கொரிய அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு