நில அளவையாளர்கள் பணிப்புறக்கணிப்பு

அரச நில அளவையாளர் சங்கத்தினர் நாளை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் துமிந்த உடுகொட தெரிவித்துள்ளார்.

நாட்டின் நில அளவை பணிகளை அமெரிக்க நிறுவனம் ஒன்றிடம் கையளிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பல்கலைக்கழக கல்விசார பணியாளர்கள் முன்னெடுத்துவரும் போராட்டம் இன்று 14ஆம் நாளை எட்டியுள்ள போதிலும், தமது போராட்டத்திற்கு இதுவரை எற்தவொரு தீர்வும் கிடைக்கவில்லையென பல்கலைக்கழக தொழிற்சங்க ஒன்றிணைந்த குழுவின் தலைவர் எட்வட் மல்வத்தகே தெரிவித்துள்ள நிலையில், இந்த போராட்டத்திற்கு நேற்று முதல் ஆதரவு வழங்குவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்க தலைவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு