சவூதியில் இலங்கைப் பெண் கொலை

சவூதி அரேபியாவில் இலங்கைப் பணிப்பெண் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை காலை சவூதி அரேபியாவின் புரைதா என்ற பிரதேசத்தில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றிருப்பதாகவும், 42 வயதான இலங்கைப் பெண் ஒருவரே சவூதி பிரஜை ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

பின்னர் அந்த சவூதி பிரஜையும் அதே துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாகவும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் தெரியவந்துள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அந்த நாட்டு பொலிஸார் ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு