மாடுகள் களவாடியவர்கள் கைது

புங்குடுதீவு பகுதியில் இருந்து களவாடிய மாடுகளை சட்டவிரோதமாக கடத்தி சென்ற நபர் ஒருவர் மண்டைத்தீவு சோதனை சாவடியில் வைத்து நேற்று ஊர்காவற்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

புங்குடுதீவு பகுதிகளில் களவாடிய மாடுகளை வாகனத்தில் கடத்தி செல்ல முற்பட்டவேளை மண்டைதீவு பொலிஸ் சோதனை சாவடியில் வைத்து மட்டக்களப்பை சேர்ந்த வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த வாகனத்தில் இருந்து கன்றுகளுடன் பசு மாடுகளென 07 மாடுகள் பொலிஸாரால் மீட்கப்பட்டன.

கைது செய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், குறித்த நபரையும் மீட்கப்பட்ட மாடுகளையும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு