கண்டி வன்முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழில் ஆர்ப்பாட்டம் (Photos)

கண்டியில் கட்டவிழ்த்து விடப்பட்ட இனவாத வன்செயல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் இன்று காலை யாழ்ப்பாணத்தில் கண்டன ஆர்ப்பட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக இடம்பெற்ற இன அடக்குமுறை யுத்தத்தின் காரணமாகப் பல்வேறு இன்னல்களையும் எதிர்கொண்ட எம்மை மீண்டுமொரு இனவாத யுத்தத்திற்குள் தள்ளும் முயற்சியாக அண்மையில் அம்பாறை மாவட்டத்தைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் முஸ்லிம் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனவாத வன்செயல்கள் அமைந்துள்ள இத்திட்டமிட்ட வன்செயல்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கடந்த காலங்களில் எம்மீது திணிக்கப்பட்ட தமிழ் – சிங்கள இன முரண்பாட்டுத் தீயினை திட்டமிட்ட இனக் கலவரங்களினூடாக கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதாக்கி, பின்னர் கொடிய யுத்தம் ஒன்றிற்குள் எமது தேசத்தைக் கொண்டுபோய்த் தள்ளி பெரும் அழிவுகள் ஏற்படக் காரணமான சக்திகள், மீண்டும் அதே வகையில் அக்கொடிய யுத்தத்தினால் பாதிப்பை எதிர்கொண்ட இலங்கையின் இன்னொரு தேசிய இனமான முஸ்லிம் மக்களுக்கு எதிராக வன்முறைகளைத் தூண்டி விடுவதன் மூலம் முஸ்லிம் – சிங்கள இன முரண்பாட்டு யுத்தமொன்றை ஏற்படுத்தி தமது குறுகிய அரசியல், பொருளாதார நலன்களுக்காக எம் வாழ்வை அழிக்க முனைகின்றன.

எனவே, இந்த உண்மையை உணர்ந்துகொண்டு எமதும் எமது எதிர்கால சந்ததியினதும் இருப்பைக் காத்துக்கொள்ளும் பொருட்டு, எம் மத்தியில் இன, மத, மொழி அடிப்படையிலான பேதங்களைப் பெரிதாக்கி, எமது வாழ்வை அழிக்க முயலும் சக்திகளுக்கு எதிராக, நாம் அனைவரும் ஒற்றுமையாகக் குரல்கொடுக்கும் முகமாக இந்த கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சமவுரிமை இயக்கம் மற்றும் மாக்சிஷ லெனினிஷ கட்சி உள்ளிட்ட பல அமைப்புக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு