சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறு விரைவில்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை இம்மாத இறுதியில் வெளியிடவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மார்ச் மாதம் 28ம் திகதி பெறுபேறுகளை வெளியிட எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளதுடன், க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில் பெறுபேறுகளை மதிப்பிடும் நடவடிக்கைகள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்காக 06 இலட்சத்து 88,573 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு