அன்றாட செயற்பாடுகள் பாதிப்பு: வடக்கு மீனவர்கள் கவலை

சீரற்ற காலநிலை காரணமாக தாம் மீன்பிடியில் ஈடுபடுவதை தவிர்த்துள்ளமையால், தமது அன்றாட செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக வடக்குக் கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இன்று காலை முல்லைத்தீவு கடலில் கடற்றொழில் படகொன்று விபத்துக்குள்ளானதை தொடர்ந்து மன்னார் கடற்றொழிலாளர்களும் கடலுக்கு செல்வதை தவிர்த்துள்ளனர்.

இந்த சீரற்ற காலநிலை தொடர்ந்து நிலவுமாயின் தமது பொருளாதார நிலைக்கு பாரியளவில் பாதிப்பு ஏற்படும் எனவும் அப்படியான நிலை ஏற்படும் பட்சத்தில், மீன்களின் விலை அதிகரிக்கக்கூடும் எனவும் வடக்கு கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, நிலவும் சிரற்ற காலநிலை வழமைக்கு திரும்பும் வரையில் கடற்றொழிலில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு வானிலை அவதான நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு