சட்ட உறுதிப்பத்திரத்தை வழங்குமாறு தொழிலாளர்கள் கோரிக்கை

தேயிலை நிலம் பிரித்துக் கொடுக்கப்படுமானால் அதற்கான சட்ட உறுதிப்பத்திரத்தை வழங்க தோட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென களனிவெளி தோட்டத் தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

களனிவெளி பெருந்தோட்ட கம்பனி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் டிக்கோயா டிலரி கீழ் பிரிவு தோட்டத் தொழிலாளர்களால் இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளதுடன், 130 ஹெக்டயர் தேயிலை நிலத்தில் சுமார் 33 ஹெக்டயர் காடாக்கப்பட்ட தேயிலை நிலம் தனியாருக்கு ஏற்கனவே பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தொழிலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த நிலையில், எஞ்சியுள்ள 100 ஹெக்டயர் தேயிலை நிலத்தை அங்கு தொழில் செய்யும் 140 பேருக்கு பிரித்துக் கொடுக்க தோட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகவும், இதற்கமைய, பிரித்துக் கொடுப்பதாகக் கூறப்படும் தேயிலை நிலத்தையும், அதில் உள்ள தேயிலை மரங்களையும் தொழிலாளர்களே தமது சொந்தப் பணத்தை செலவு செய்து பராமரிக்க வேண்டும் என்பதுடன், அந்தத் தேயிலை மலைகளில் கொய்யப்படும் கொழுந்தினை தோட்ட நிர்வாகத்திற்கு வழங்க வேண்டுமெனக் கூறுப்படுவதாகவும் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், குறித்த நிலத்துக்கு எந்த விதமான உறுதிப்பத்திரமும் வழங்கப்படாமல், அதனை பாரமரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக தொழிலாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளதுடன், தேயிலை நிலத்தை பிரித்துக் கொடுக்க தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமாயின், பிரித்துக் கொடுக்கப்படும் நிலங்களுக்கு சட்டரீதியான உறுதிப்பத்திரத்துடன் கால எல்லையை நிர்ணயத்து வழங்கப்பட வேண்டுமென தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு