சவூதியில் பெண் சுட்டுக் கொலை: வெளியானது திடுக்கிடும் தகவல்

சவூதி அரேபியாவில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட இலங்கை பணிப்பெண்ணின் பூதவுடலை நாட்டுக்கு கொண்டுவருவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, சவூதியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள், அவரின் மரண விசாரணைகள் தொடர்பாக ஆராய்வதற்காக, பூதவுடல் வைக்கப்பட்டுள்ள அல் ராஸ் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.

காலி பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய பிரியங்கா ஜெயசங்கர் என்ற பணிப் பெண், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சவூதிக்கு பணிப் பெண்ணாக சென்றுள்ளார். சவூதி அரேபியாவின் புரைடா பகுதியிலுள்ள வீடொன்றில் பணியாற்றிய அவரை, அவரது தொழில் வழங்குநர் கடந்த சனிக்கிழமை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளதுடன், பின்னர், அவர் குறித்த துப்பாக்கியால் தம்மைத் தாமே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்துள்ளதாகவும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு