இலங்கை தொடர்பில் ஜப்பான் அரசரின் கருத்து

தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு உதவுவதற்கு தயாரென ஜப்பான் சக்கரவர்த்தி அகிஹிதோ தெரிவித்துள்ளார்.

ஜப்பானுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஜப்பான் சக்கரவர்த்தி அகிஹிதோவுக்கும் இடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றது.

டோக்கியோ நகரிலுள்ள இம்பீரியல் மாளிகைக்குச் சென்ற ஜனாதிபதியையும், அவரின் பாரியார் ஜயந்தி சிறிசேனவையும் ஜப்பான் சக்கரவர்த்தியும், மிச்சிகோ மகாராணியாரும் வரவேற்றதன் பின்னர், இரு தலைவர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜப்பான் நாட்டுக்கான அரசுமுறை பயணத்திற்கு அழைப்பு விடுத்தமைக்காக ஜப்பான் சக்கரவர்த்திக்கு ஜனாதிபதி இதன்போது நன்றி தெரிவித்துள்ளதுடன், இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை அனைத்து வகையிலும் பலப்படுத்துவது தமது எதிர்பார்ப்பாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், 1981ஆம் ஆண்டு இலங்கைக்கு மேற்கொண்ட பயணம் குறித்து ஜப்பான் சக்கரவர்த்தி நினைவுகூர்ந்துள்ளார். இதன்போது கண்டி தலதா மாளிகைக்கு சென்று வழிபடும் சந்தர்ப்பம் தமக்குக் கிடைத்ததாகவும் குறிப்பிட்டதுடன், ஜப்பான் இயற்கை அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்த சந்தர்ப்பங்களில் உண்மையான நண்பன் என்றவகையில் ஜப்பானுக்கு இலங்கை வழங்கிய ஒத்துழைப்புகளை ஜப்பான் சக்கரவர்த்தி நினைவுகூர்ந்ததாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு