கோட்டாவின் துயரத்தை முடிவுக்கு கொண்டு வருமாறு கோரிக்கை

சிரியாவின் கிழக்கு கோட்டா பிராந்திய மக்கள் அனுபவிக்கும் துயரங்களை முடிவுக்கு கொண்டுவருமாறு, ஐக்கிய நாடுகளின் பொதுசெயலாளர் அந்தோனியோ குட்டெரெஸ் வலியுறுத்தியுள்ளார்.

இந்த பகுதியில் சிரிய அரசாங்கப் படையினர் தொடர்ந்து 03 வாரங்களுக்கு மேலாக வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருவதுடன், ரஷ்யாவின் பின்புலத்துடன் சிரிய படையினர் தரைவழியாகவும் கிழக்கு கோட்டாவின் கட்டுப்பாட்டை கைப்பற்றுவதற்காக தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இதுவரையில் 1022 பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாக, சிரியாவில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள அமைப்புகள் தெரிவிக்கும் நிலையில், அங்கு மோதல் தவிர்ப்பை அமுலாக்குவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்ட போதும், அவை வெற்றியளிக்கவில்லை எனவும், இந்த சூழ்நிலை குறித்து தாம் கடுமையாக வருத்தமடைவதாகவும் அந்தோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.

இந்தவிடயத்தில் அனைத்து தரப்பினரும் ஒரே நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்பட வேண்டும் எனவும், சிரிய மக்களது துயரத்தை முடிவுக்கு கொண்டு வந்து, அங்கு இடம்பெறும் மோதல்களுக்கு விரைவான அரசியல் தீர்வு ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்றும் ஐ.நா. பொதுச் செயலாளர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு