ஐவரின் உடலங்களும் ஒரே குழியில் அடக்கம்

திருகோணமலை, நிலாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள பெரியகுளத்திற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை தாமரைப் பூப்பறிக்கச் சென்ற போது தோணி கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்த ஐந்து பேரின் சடலங்களும் நேற்று நிலாவெளி இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.

இறுதிச் சடங்கு நிகழ்வில் அஞ்சலி செலுத்துவதற்காக உறவினர்கள், நண்பர்கள், கிராம பொதுமக்கள் என அதிக எண்ணிக்கையிலானோர் கலந்து கொண்ட நிலையில், நீரில் மூழ்கி உயிரிழந்த ஐவரின் உடல்களும் ஒரே சவக் கிடங்கில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை அங்குள்ள குளத்திற்குச் சென்று பொங்கி வழிபட்டு, பொழுதைக் கழிக்கச் சென்றவர்கள் சேறும், சகதியுமான குளத்திலுள்ள தாமரைப் பூக்களைப் பறிக்கச் சென்ற வேளை, தோணி கவிழ்ந்து இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்திருந்தனர்.

நிலாவெளி 2ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களான சுரேஸ் கேசிக்ராஜ், (வயது 9) சுரேஸ் யுதேஸன், (வயது 7), சுகந்தன் பிரணவி (வயது 7), தங்கத்துரை சங்கவி (வயது 9) மற்றும் தோணியை ஓட்டிச் சென்ற தருமலிங்கம் தங்கத்துரை (வயது 32) ஆகியோரே நீரில் மூழ்கி மரணமடைந்திருந்தனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு