முல்லைத்தீவில் கரையொதுங்கிய நிலையில் மீனவர் ஒருவரின் சடலம் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.
நிலவிய சீரற்ற காலநிலையுடன் மீன்பிடியில் ஈடுபட்ட படகில் ஏற்பட்ட கோளாறு காரணமாக குறித்த நபர் கடலில் வீழ்ந்து உயிரிழந்திருக்க கூடுமென பொலிசார் தெரிவிப்பதுடன், நேற்று இவ்வாறு உயிரிழந்துள்ளவர் முல்லைத்தீவு பிரதேசத்தை சேர்ந்த 38 வயதான மீனவரெனத் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, முல்லைத்தீவு நாயாறு பகுதியில் கடற்றொழிலுக்குச் சென்ற மூன்று மீனவர்களும் இதுவரையில் கரை திரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.