தொகுதி மீள்நிர்ணய அறிக்கை விவாதம்

மாகாண சபைகள் தேர்தல் தொகுதி மீள்நிர்ணய அறிக்கை தொடர்பான விவாதம் எதிர்வரும் 22ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையிலான நாடாளுமன்ற தெரிவுக் குழு இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய தேர்தல் முறைமையின் கீழ், மாகாண சபை தேர்தல் தொகுதிகளை மீள்நிர்ணயம் செய்யும் சட்டமூலம் கடந்த 2017ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இந்த புதிய முறைமையின் கீழ், 50 சதவீதம் வட்டார முறைமையிலும், 50 சதவீதம் விகிதாசார முறைமையிலும் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர். இதற்கு அமைவாக, புதிய மாகாணசபை தேர்தல் தொகுதி எல்லைகளை மீள்நிர்ணயம் செய்வதற்காக, முன்னாள் நில அளவீட்டு ஆணையாளர் நாயகம் கனகரத்தினம் தவலிங்கம் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டிருந்தது.

இந்த குழு தமது அறிக்கையை கடந்த பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் ஃபைசர் முஸ்தபாவிடம் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு