ஆன்மீக சொற்பொழிவாளர் வசந்தா வைத்தியநாதன் காலமானார்

செய்திகள் முக்கிய செய்திகள் 2

அருள்மொழியரசி, வித்துவான், கதாப்பிரசங்கி, கலாபூஷணம் திருமதி. வசந்தா வைத்தியநாதன் அம்மையார் உடல் நலக்குறைவு காரணமாக தனது 80ஆவது வயதில் இன்று காலை இறையடி சேர்ந்தார்.

அம்மையாரின் இறுதிக்கிரியைகள் பொரள்ளை இந்து மயானத்தில் நாளை இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமதி. வசந்தா வைத்தியநாதன் அம்மையார், இலங்கையில் மிக நீண்ட காலமாக ஆன்மீக சேவையாற்றிய ஆன்மீகவாதியாகவும் சமய சொற்பொழிவாளராகவும் நேரடி வர்ணனையாளராகவும் திகழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.