10 இலட்சம் போத்தல்கள் மீட்பு

நல்லதண்ணி, சிவனொளிபாதமலைக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு வருகை தந்த இலட்சக்கணக்கான யாத்திரிகர்களால் வீசி எறியப்பட்ட சுமார் 10 இலட்சத்துக்கும் அதிகமான பிளாஸ்டிக் போத்தல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக நல்லதண்ணி மீள்சுழற்சி நிலையத்தின் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ.ஹேமந்த தெரிவித்துள்ளார்.

இந்த அதிகபடியான பிளாஸ்டிக் போத்தல்கள் அம்பகமுவ பிரதேச சபையின் கழிவு சேகரிப்பு பிரிவினாலும், நல்லதண்ணி வனவிலங்கு காரியாலய பிரிவினாலும் சேகரிக்கப்பட்டதாகவும், நல்லதண்ணி நகரத்திலிருந்து சிவனொளிபாதமலை உச்சி வரை இந்த பிளாஸ்டிக் குடிநீர் போத்தல்கள் மற்றும் மென்பான போத்தல்கள் என்பன வீசப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இனிவரும் காலங்களில் சிவனொளிபாதமலை பருவ காலத்தில் புனித பூமி சூழலுக்கு உக்கலடையாத போத்தல்கள் உள்ளிட்ட பொருட்களை வீசுவதிலிருந்து தவிர்த்து சூழலுக்கு இணக்கமான பருவகால வழிபாடுகளில் ஈடுபடுமாறு அனைத்து யாத்திரிகர்களிடமும் கேட்டுகொள்வதாக கழிவு சேகரிப்பு மத்திய நிலையத்தின் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ.ஹேமந்த வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு