ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்த நாட்டு பிரதமர் சின்சோ அபேவைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார்.
இதனிடையே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன டோக்கியோவிலுள்ள நவீன கழிவு முகாமைத்துவ நிலையத்தை பார்வையிட்ட அதேவேளை, நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சூழலுக்கு நட்புடைய வகையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் அந்த நடவடிக்கைகளை ஜனாதிபதி பார்வையிட்டார்.
இலங்கையில் திண்மக் கழிவு பிரச்சினையை தீர்ப்பதற்கு இத்தகைய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராயவுள்ளதாகவும், இதற்கு ஜப்பானின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வது குறித்து கவனம் செலுத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.