வட்ஸ்அப் தடை நீக்கம்

இன்று நள்ளிரவு முதல் வட்ஸ்அப் பயன்பாட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுவதாக தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஒஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கண்டி பிரதேசத்தில் ஏற்பட்ட குழப்பநிலையை கருத்திற்கொண்டு சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு நாட்டில் தடை விதிக்கப்பட்டிருந்தது.

அதற்கமைவாக, வைபர் பயன்பாட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நேற்று (13) நள்ளிரவு முதல் நீக்கப்பட்ட போதிலும், பேஸ்புக் மீதான தடை நீக்கம் குறித்து இதுவரை அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு