பேஸ்புக் நிறுவன அதிகாரிகள் இலங்கை விரைவு

பேஸ்புக் வலைத்தளத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியமைத் தொடர்பில், கலந்துரையாடலை மேற்கொள்வதற்காக பேஸ்புக் நிறுவனத்தின் அதிகாரிகள் மூவர் இன்று இலங்கைக்கு வரவுள்ளனர்.

இவர்கள் நாளைய தினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ ஆகியோரை சந்திக்கவுள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ள நிலையில், குறித்த குழுவினருடன் மேற்கொள்ளப்படும் கலந்துரையாடலையடுத்து, பெரும்பாலும் நாளை மறுதினம் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின் தடைகள் நீக்கப்படலாமென தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு