நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து கலந்துரையாடல்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து கலந்துரையாடுவதற்காக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் ஒன்றுகூடவுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இந்த ஒன்றுகூடல் இடம்பெறவுள்ளதாகவும், பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அக்கட்சியின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கிழக்கு, வடமத்திய, சப்ரகமுவ ஆகிய மாகாண சபைகளின் பதவிகாலம் நிறைவடையவுள்ளதாகவும், குறித்த மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தும் திகதி குறித்து அரசாங்கம் அறிவிக்க வேண்டும் எனவும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி வலியுறுத்தியுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு