பேஸ்புக் தடை நீக்கம்? நாளை தீர்மானம்

பேஸ்புக் நிறுவன உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதியின் செயலாளருக்கும் இடையில் நாளைய தினம் இடம்பெறவுள்ள கலந்துரையாடலின் பின்னர் பேஸ்புக்கிற்கான தடையை நீக்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது பேஸ்புக் சமூக வலைத்தளம் ஊடாக இனவாத கருத்துக்கள் பரவுவதை தடுப்பதற்கு முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும், பேஸ்புக் நிறுவன அதிகாரிகள் குழுவுடன் நாளை இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தையை தொடர்ந்து நாளை மறுநாள் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மீதான தடையை நீக்கிக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு