ரஷ்ய இராஜதந்திரிகளை வெளியேற்ற தீர்மானம்

பிரித்தானியாவிலுள்ள 23 ரஷ்ய இராஜதந்திரிகளை வெளியேற்ற அந்நாட்டின் பிரதமர் தெரேசா மே தீர்மானித்துள்ளார்.

பிரித்தானியாவின் சாலிஸ்பரி நகரில் கடந்த 4ஆம் திகதி வணிக வளாகம் ஒன்றின் வெளியே முன்னாள் ரஷ்ய உளவாளி மற்றும் அவரது மகள் மீது நச்சு தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், இந்த நச்சு தாக்குதலில் ஈடுபட்டது ரஷ்யா தான் என பிரதமர் தெரேசா மே குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்த சம்பவம் பிரித்தானியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் தெரசா மே தேசிய பாதுகாப்பு கவுன்சிலை கூட்டி ஆலோசனையும் நடத்தினார்.

இதனிடையே ரஷ்யாவின் தலையீடு இருப்பது உறுதிசெய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென பிரித்தானிய வெளியுறவு செயலாளர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ள நிலையில், பிரித்தானியாவிலுள்ள 23 ரஷ்ய இராஜதந்திரிகளை வெளியேற்ற பிரதமர் தெரேசா மேயின் தீர்மானம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு