இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த முடியாது – சுமந்திரன்

சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையை பாரப்படுத்த முடியாதென நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ். இளங்கலைஞர் மண்டபத்தில் நேற்று (14) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அத்துடன், தற்போது ஜெனீவா கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்றது. இக்கூட்டத் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக பிரித்தானியா ஒழுங்குபடுத்திய உறுப்பு நாடுகளுக்கான கூட்டத்தில் 26 நாடுகள் பங்குபற்றியுள்ளதாகவும், இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு என்ன என்பதை கேட்டு அறிந்துள்ளதாகவும், எத்தகைய அழுத்தங்கள் கொடுக்கப்பட வேண்டுமென தாங்கள் உத்தியோகபூர்வமாகக் கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போது கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில் இம்முறை இலங்கை தொடர்பாக 32 நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாகவும், இவற்றை யார் நடத்துகிறார்கள் ஏன் நடத்துகிறார்கள் என்ற தெளிவில்லை. உறுப்பு நாடுகளும் தமிழ் மக்கள் தொடர் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் உத்தியோகபூர்வ நிலைப்பாடு என்ன என்பதைத்தான் கேட்பதாகக் குறிப்பிட்டுள்ள சுமந்திரன், சிலர் ஜெனிவா சென்று தீர்மானங்களை எரிக்கிறார்கள். நாங்கள் தீர்மானம் வேண்டும் என்கின்றோம். ஐக்கிய நாடுகள் சபையில் எவற்றைச் செய்யமுடியும் எமது மக்களுக்கு சரியாக போய் சென்றடையவில்லை. அங்கு சென்றால் எல்லாம் கிடைத்து விடும் என்று எமது மக்களுக்கு ஊக்குவித்துள்ளார்கள். ஜெனீவாவில் இலங்கை அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் 36 விடயங்கள் இருக்கின்றன. இதில் மூன்று விடயங்கள் பொறுப்புக்கூறல் சம்பந்தமானது இறுதியாக போர்க்குற்றம் சம்பந்தப்பட்டது. ஏனைய 33 விடயங்களும் மிக முக்கியமானவை. இவ்வாறான பலவற்றை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் பிரசாரம் என்னவெனில், இந்தத் தீர்மானத்தினால் பயனில்லை இதைக் கைவிட்டுவிட்டு இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும். இதனைத்தான் தற்போது கூறிவருகிறார்கள். இது மக்களுக்குத் தேவையானதா யாராவது பகிரங்க வெளியில் இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த முடியுமென கூறமுடியுமா இது எவராலும் முடியாது. இந்த உண்மை எல்லோருக்கும் தெரியும் என்றும் சுமந்திரன் எம்.பி மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு