மருதங்கேணியில் இடம்பெறும் போராட்டத்திற்கு ஒரு வயது

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, மருதங்கேணியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் இன்றுடன் ஒரு வருடத்தைப் நிறைவு செய்கிறது.

மருதங்கேணி பிரதேச செயலகத்தின் முன்பாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை கண்டறியும் அமைப்பால், கடந்த வருடம் மார்ச் மாதம் 15ஆம் திகதி இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு, இன்றுடன் ஒரு வருடத்தை பூர்த்தி செய்கின்ற நிலையில், இதனை முன்னிட்டு இன்று கண்டனப் பேரணியையும் கவனயீர்ப்பு போராட்டத்தினையும் முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அதேநேரம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, திருகோணமலை, வவுனியா போன்ற இடங்களிலும் காணாமல் போனோரது உறவினர்கள் நீண்டகாலமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். தங்களுக்கு தீர்வு வழங்கப்படுமென பல்வேறு தரப்பினரால் உறுதியளிக்கப்பட்டுள்ள போதிலும், இன்னும் காணாமற்போன தங்களது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லையென அவர்கள் கவலை வெளியிட்டுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு