கடன் அற்ற உதவி வழங்க ஜப்பான் முன்வருகை

இலங்கையின் அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு வழங்கும் போது, பெரும்பாலும் கடன் இல்லாத உதவிகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஜப்பானின் பிரதமர் சின்சோ அபே தெரிவித்துள்ளார்.

ஜப்பானுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்த நாட்டின் பிரதமரை சந்தித்த போதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் சக்திவள உற்பத்தித் துறை, அதிவேக நெடுஞ்சாலை அமைப்பு, உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தல் போன்ற விடயங்களுக்கும் ஜப்பான் உதவியளிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இந்த சந்திப்பின் போது ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையில் சுகாதார சேவை அபிவிருத்திக்கான உடன்படிக்கை ஒன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு