யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக் கைதிகளுக்கு பற்பசைக்குள் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திய பெண்ணை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
கோப்பாய் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவரை பார்வையிட கடந்த செவ்வாய்க்கிழமை சென்றுள்ளார். அவர் கொண்டு சென்ற பொதியை சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் சோதனையிட்டபோது, பொதியில் இருந்த பற்பசைக்குள் மறைத்து ஹெரோயின் போதைப்பொருள் கொண்டு செல்லப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட குறித்த பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், அவருக்கு உதவிய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சந்தேக நபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்று ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து, அவர்களை எதிர்வரும் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மேலதிக நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.