ஆலயங்களில் ஒலிபெருக்கி சத்தத்தைக் குறைக்க அறிவுறுத்து

வடக்கு மாகாணத்தில் அதிக சத்தத்துடன் ஆலயங்களில் ஒலிபெருக்கி இயக்கப்படுவதைக் கட்டுப்படுத்துமாறு பொலிஸாருக்கும் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அறிவுறுத்தியுள்ளார்.

ஆலயங்களில் அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கிகள் இயக்கப்படுவதால் அவற்றின் சூழலில் வாழும் வயோதிபர்கள் நெஞ்சு அழுத்தத்துக்கு உள்ளாக்கப்படுவதாகவும், குற்றவியல் சட்டக்கோவையின் 98ஆம் பிரவின் கீழ் ஆலய நிர்வாகங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் பொலிஸாருக்குச் சுட்டிக்காட்டியுள்ளார்.

காலத்துக்குக் காலம் பொலிஸாருடன் பேச்சுக்கள் நடத்தப்படுவதாகவும், எமக்கு மக்களால் முன்வைக்கப்படும் முறைப்பாடுகள் பொலிஸாரிடம் தெரிவிக்கப்படுவதுடன், அதுதொடர்பில் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பேசப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் பொலிஸாருக்கு உள்ள பற்றாக்குறையை நிரப்புவதற்காக 81 ஆண்களும் 02 பெண்களும் இங்கு புதிய பொலிஸ் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற போதிலும், இந்த எண்ணிக்கை போதாது என்றும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு