நன்னீர் மீன் வளர்ப்பு ஊக்குவிப்பு

நன்னீர் மீன் வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் காசல்ரீ நீர்த்தேக்கத்தில் ஒரு இலட்சம் கிராப் மீன் இனக் குஞ்சுகள் விடப்பட்டுள்ளன.

காசல்ரீ நன்னீர் மீன்பிடி தொழிலாளர்களின் கோரிக்கைக்கு அமைய நுவரெலியா நன்னீர் மீன் வளர்ப்பு திணைக்களத்தினால் இந்த திட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது. தற்போது, காசல்ரி நீர்த்தேக்கத்தில் பாதுகாப்பு கூடுகள் அமைத்து விடப்பட்ட குறித்த மீன்குஞ்சுகள் ஒரு மாதகாலத்தின் பின்னர் நீர்த்தேக்கத்திற்கு திறந்து விடப்படவுள்ளதாகவும், அவை இருபது மடங்கு இனப்பெருக்கத்தை கொண்டவை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு