குரோத கருத்துக்களைக் கட்டுப்படுத்த புதிய சட்ட ஆலோசனைகள்

சமுக வலைத்தளங்களில் குரோத கருத்துக்களை கட்டுப்படுத்துவதற்கான சட்டங்களை உருவாக்குவதற்கான சட்ட ஆலோசனைகள் பெறப்பட்டு வருவதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கண்டியில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களை அடுத்து, இலங்கையில் சமுக வலைத்தளங்களை கட்டுப்படுத்துவதற்கான தேவை குறித்து அவதானம் அதிகரித்துள்ளது. இதன்படி கடந்த வாரம் வரையில் சில தினங்களுக்கு பேஸ்புக் உள்ளிட்ட சமுக வலைத்தளங்களுக்கு தடை அமுலாக்கப்பட்டிருந்த நிலையில், குரோத மற்றும் இனமுறுகலை ஏற்படுத்தும் வகையிலான கருத்துக்களை சமுக வலைத்தளங்களில் இருந்து நீக்குவதற்கு தேவையான சட்டம் சார்ந்த நடவடிக்கைகளை படிப்படியாக மேற்கொள்வதாக தொலைத்தொடர்புகள் ஒழுங்கமைப் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதேவேளை, இவ்வாறு சமுக வலைத்தளங்களை கட்டுப்படுத்தும் சட்டங்களை உருவாக்கும் போது, சமநிலை பேணப்பட வேண்டும் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளதுடன், இதுதொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் தீபிகா உடுகமவினால், இலங்கைத் தொலைத்தொடர்புகள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் தலைவருக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதில் சமுக வலைத்தளங்களை கட்டுப்படுத்தும் சட்டங்கள் உருவாக்கப்படும் போது, பொதுமக்களின் கருத்து வெளியிடும் சுதந்திரம் மற்றும் தகவல் அறியும் உரிமை என்பன பாதிக்கப்படக்கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு