இன்று முதல் நஷ்டஈடு

கண்டியில் இடம்பெற்ற அமைதியற்ற சூழலின் போது சேதமடைந்த வீடுகள் மற்றும் வியாபார நிலையங்களுக்கான முதற்கட்ட நஷ்டஈட்டுக் கொடுப்பனவு வழங்கும் திட்டம், இன்று ஆரம்பமாகவுள்ளது.

மேற்படிக் கொடுப்பனவை வழங்குவமற்கான மதிப்பீடு நடவடிக்கைகள் அனைத்தும் கடந்த வெள்ளிக்கிழமையுடன் (16) நிறைவடைந்த நிலையில், இன்று முதல் நஷ்டஈட்டுக் கொடுப்பனவு வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்படுமென கண்டி மாவட்டச் செயலாளர் எச்.எம்.பிஹிட்டிசேகர தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வு அமைச்சினால், இந்தக் கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ள நிலையில், 50 ஆயிரம் ரூபா முதல், ஒரு இலட்சம் ரூபா வரையான கொடுப்பனவு இன்று முதல் வழங்கப்படவுள்ளது.

கண்டியில் ஏற்பட்ட அமைதியற்ற சூழ்நிலை காரணமாக, 470 வீடுகளும் 24க்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்களும் சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு