யாழ்ப்பாணம் அரியாலை முள்ளி பகுதியில் ரயிலுடன் மோதுண்டு வயோதிபர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்தை நோக்கிப் பயணித்த ரயிலில் மோதுண்டு, யாழ். கொழும்புத்துறையைச் சேர்ந்த செல்லையா கந்தசாமி என்ற 73 வயதுடைய முதியவரே உயிரிழந்துள்ளார்.