சிரிய ஜனாதிபதியின் திடீர் விஜயம்

சிரிய ஜனாதிபதி பசார் அல் அஸாட் கிழக்கு கௌட்டா பகுதிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

அரச படையினர் கிழக்கு கௌட்டா பகுதியில் 80 சதவீதமானவற்றை கைப்பற்றியுள்ள நிலையில், படையினருக்கு உற்சாகமளிக்கும் நோக்குடன் அவர் அங்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கிழக்கு கௌட்டா 2012ஆம் ஆண்டு முதல் கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்து வந்துள்ள நிலையில், கடந்த ஒருமாத காலமாக இடம்பெற்று வரும் உக்கிர மோதல் காரணமாக சுமார் 1,100 பொதுமக்கள் வரையில் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு