இலங்கைக்கு ஆபத்து

உலகில் காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிப்பை எதிர்கொள்ளவுள்ள 10 நாடுகளில் இலங்கையும் உள்ளடங்குவதாக ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபிவிருத்தியடைந்துவரும் மற்றும் உலக சந்தையில் முன்னணியிலுள்ள 67 நாடுகளை தெரிவு செய்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதில், உலக மக்கள் தொகையில் 80 சதவீதமான மக்கள் இந்த 67 நாடுகளில் வாழ்ந்து வருவதுடன், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 94 சதவீதத்தை இந்த நாடுகள் கொண்டுள்ளன. உலக வங்கியொன்றின் ஊடாக மேற்கொண்ட இந்த ஆய்விற்கு அமைய காலநிலை மாற்றத்தால் அதிக பாதிப்பை எதிர்கொண்டுள்ள நாடாக இந்தியா உள்ளது.

பிலிப்பைன்ஸ் மற்றும் பங்களாதேஸ் ஆகிய நாடுகள் இதில் அடுத்தகட்ட அபாயத்தில் உள்ளன. பூமியின் வெப்பம் அதிகரிப்பு, மழை குறைவதுடன் காற்றின் வேகம், வெள்ளப்பெருக்கு ஆகிய சீரற்ற காலநிலை பொதுவாக இந்த நாடுகளில் காணப்படக்கூடும் எனவும் அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு