8511 காச நோயாளர்கள்

2017ம் ஆண்டில் இலங்கையில் 8511 காச நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், அதில் 8113 பேர் புதிதாக கண்டறியப்பட்ட நோயாளர்கள் என்றும் சுகாதார மேம்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதேவேளை காச நோய் மற்றும் எச்.ஐ.வி தொற்று ஆகிய இரண்டு நோயினாலும் பாதிக்கப்பட்ட 24 பேர் கடந்த 2017ம் ஆண்டில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதிகமான காச நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாகவும் அவர்களின் எண்ணிக்கை 3601 பேர் என்றும் தெரிய வந்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 2051 காச நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், காச நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் அதனை முழுமையாக குணப்படுத்த முடியும் என்றும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு