தடைசெய்யப்பட்ட பொலித்தீன் உற்பத்தியாளர்களுக்கு சட்டநடவடிக்கை

சுற்றாடலுக்கு பாதிப்பற்ற பொலித்தீன் என்று கூறி போலியான முறையில் தடைசெய்யப்பட்டுள்ள பொலித்தீன் வகைகளை உற்பத்தி செய்யும் வர்த்தகர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அவ்வாறான வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையாக சட்டத்தை அமுல்ப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக அதன் விசாரணைப் பணிப்பாளர் என்.எஸ்.கமகே தெரிவித்துள்ளதுடன், பெரும்பாலான பொலிதீன் தயாரிப்பாளர்கள் சுற்றாடலுக்கு பாதிப்பற்ற பொலித்தீன் தயாரிப்பிலேயே ஈடுபட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு