நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிப்பு

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை இன்று (21) சபாநாயகரிடம் கையளிக்கப்படுவதாக கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

இன்று பிற்பகல் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகரிடம் கையளிக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளதுடன், நம்பிக்கையில்லா பிரேரணையில் கூட்டு எதிர்க்கட்சியினருக்கு மேலதிகமாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களும் கையொப்பமிடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சபாநாயகரிடம் நம்பிக்கையில்லா பிரேரணை கையளிக்கப்பட்ட பின்னர் அதன் முக்கியத்துவத்தை ஆராய்ந்து, விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்கு நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படுமென நம்புவதாக உதய கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு