பொலிஸ் ஆணைக்குழு செயலாளர் பதவி நீக்கம்: கபே அமைப்பின் குற்றச்சாட்டு

கண்டியில் அண்மையில் இடம்பெற்ற அசாதாரண நிலவரம் குறித்து அறிக்கை கோரியதாலேயே தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் பதவி நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளராக பதவி வகித்த ஆரியதாஸ குரே பதவி நீக்கப்பட்டுள்ளதாக நேற்றைய தினம் அவருக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பதில் செயலாளராக சமன் தஸநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

சட்டம் ஒழுங்கு அமைச்சினால் இவரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன், முன்னாள் செயலாளருக்கு 60 வயது பூர்த்தியாகியுள்ளமையே அவர் பதவி நீக்கப்பட காரணமெனக் கூறப்பட்டாலும், கண்டியில் அண்மையில் இடம்பெற்ற அசாதாரண நிலைமை குறித்து அறிக்கை கோரியமையே இவர் பதவி நீக்கப்படுவதற்காக காரணமென கபே அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு