ஏப்ரலில் புதிய சட்டம் அமுல்

ஏப்ரல் மாதம் 15ஆம் திகதிக்குப் பின்னர், புதிய நிலையியற் கட்டளைகள் அமுல்படுத்தப்படுமென சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (20) வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, கடற்றொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி அமைச்சரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக்க பிரியந்த கேள்வியெழுப்பியிருந்த நிலையில், அக்கேள்விக்கு ஆளுங்கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான கயந்த கருணாதிலக்க பதிலளித்தார்.

இதன்போது பதிலளித்த சபாநாயகர் கரு ஜயசூரிய, நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட புதிய நிலையியற் கட்டளைகள், எதிர்வரும் 15ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் எனவும், இந்த விவகாரம் தொடர்பிலும் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளதன் அதனடிப்படையில், வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, விடயதானத்துக்குப் பொறுப்பான அமைச்சர் அல்லது பிரதியமைச்சர் சபையில் இருப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு