இலங்கையிலிருந்து இந்தியா, மும்பை நகரிற்கு வல்லப்பட்டைகளை கொண்டு செல்ல முற்பட்டவர் பொலிசாரால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
வெள்ளவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாகவும், குறித்த நபர் 7 கிலோகிராம் வல்லப்பட்டைகளை, தனது பயணப் பையில் வைத்து கொண்டுசெல்ல முற்பட்டுள்ளதாகவும், குறித்த வல்லப்பட்டைகளின் பெறுமதி 6 இலட்சம் ரூபா எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.