மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

மட்டக்களப்பு, கண்ணபுரம் 35ஆம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 31 வயதுடைய தங்கராசா மகேஸ்வரன் என்பவர் இன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளாரென உகன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமது கால்நடைகளை மேய்த்து வருவதற்காக 35ஆம் கிராமத்தின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கோணகல 32ஆம் கிராமப் பகுதிக்கு இவர் சென்ற வேளையில், அங்கு சட்டவிரோதமான முறையில் வேலிகளில் பாய்ச்சப்பட்டிருந்த மின்சாரத்தால் தாக்கப்பட்டு, ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். சம்பவ இடத்துக்கு விரைந்த உகன பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பெரும்பான்மையின சமூகப் பண்ணையாளர்களும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த சிறுபான்மையின சமூக பண்ணையாளர்களும் கோணகல பகுதியை மாடு மேய்ப்புக்காகவே பயன்படுத்தி வருவதாக உள்ளூர் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், வழமை போன்று இன்று தமது கால்நடைகளை மேய்க்கச் சென்ற பண்ணையாளரே, மின்னிணைப்பில் சிக்குண்டு உயிரிழந்துள்ளார். இந்த மின்னிணைப்பு, வேலிகளில் சட்டவிரோதமான முறையில் பாய்ச்சப்பட்டிருந்ததாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு