ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று பாகிஸ்தான் செல்கிறார்.
பாகிஸ்தான் ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் இந்த விஜயம் இடம்பெறவுள்ளதாகவும், இந்த விஜயத்தின் போது பாகிஸ்தான் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.