கல்வி நடவடிக்கைகளை இந்தியா பகிர்ந்துகொள்ளும் – இந்தியத் தூதுவர்

கல்வியை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளின் மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மற்றும் அறிவாற்றலினை பகிர்வதுடன், மேம்படுத்தவும் முடியுமென இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சந்து தெரிவித்துள்ளார்.

இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் நேற்று இடம்பெற்ற இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு தினம் மற்றும் சர்வதேச மாணவர் தினம் என்பனவற்றை கொண்டாடும் நிகழ்வில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, இந்திய தூதுவர் தரஞ்சித் சிங்ஹா சந்து உட்பட பலர் கலந்து கொண்டதாக இந்திய உயர் ஸ்தானிகராலயத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டங்களின் கீழ் இந்தியா வருடாந்தரம் 750 புலமைப்பரிசில்களை வழங்கி வருகின்றது. குறிப்பாக மருத்துவம், பட்டப்படிப்பு, முதுமாணி பட்டம், பல்வேறு தொழில்நுட்ப கற்கைநெறிகளுக்கு புலமைப்பிரிசில்கள் இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு