மாணிக்கக்கல் அகழ்வு முயற்சி: இருவர் கைது

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ பொகவானை தோட்டபகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த இரண்டு பேரை பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்யதுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று அதிகாலை 4.30 மணியளவில் இந்த இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

பொகவந்தலாவ பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே ஆரியபுர பகுதியைச் சேர்ந்த ஒருவரும், பொகவானை தோட்டப் பகுதியைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மாணிக்கக்கல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களையும் இன்று ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்துவற்கான நடவடிக்கைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு